×

அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களில் விதிமீறல்

மும்பை: விமான நிலையங்களில் வர்த்தக விதிமுறைகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை அதானி குழுமம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியதாக அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களில் செபி மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களாக சரிவை கண்டிருந்தது. இந்நிலையில் மற்றுமொரு புதிய சர்ச்சையில் அதானி குழுமம் சிக்கியுள்ளது.

அகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வரும் அதானி குழுமம் வர்த்தக மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட 3 குழுக்கள் விதிமீறலை உறுதிப்படுத்தின. ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tags : Ahmedabad ,Mangalore ,Lucknow ,Adani Group , adani
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி