×

மதுபாட்டில்களை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத புகாரில் ஆய்வாளர் உட்பட 6 காவல்துறையினர் பணியிடைநீக்கம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் மது கடத்தலை கண்டுக்காத ஆய்வாளர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஞானசுமதி, எஸ்.ஐ வரலட்சுமியை டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல்நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து உடலில் மதுபாட்டில்களை ஒட்டிக்கொண்டு வந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து பாண்டிச்சேரியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் எடுத்து செல்லப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டியில் 2 நபர்கள் மதுபாட்டில்களை அதிகமாக எடுத்துவந்தது பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீதும் சோதனை நடத்தப்பட்ட பின்னர் 2 பேர் மீதும் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் அவர்களையும், வாகனங்களையும் அனுப்பியுள்ளனர்.

இதன் மீது விசாரணை நடைபெற்ற நிலையில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 6 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Tags : suspend
× RELATED தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமியை...