×

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார்: இன்று மூன்று ஆசிரியைகள் சிபிசிஐடி முன் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: சுஷில்ஹரி இண்டர்நேஷனல் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து போக்ஸோ வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 2 போக்ஸோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மூன்றாவதாக போடப்பட்ட போக்ஸோ வழக்கிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இவருக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியிலும் இதில் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் மற்றும் பக்தைகள் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

குறிப்பாக 5 ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டதாக முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்களது வீட்டில் ஒட்டிவிட்டு சிபிசிஐடி போலீசார் வந்தபிறகு மூன்று ஆசிரியைகள் மட்டும் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களிடம் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றியும் இதற்கு ஆசிரியைகள் எவ்வாறு உடந்தையாக இருந்தனர் என்று மாணவிகள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு விரிவான விசாரணையை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீதம் இருக்கும் 2 ஆசிரியைகளிடமும் விசாரிப்பதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது போக்ஸோ வழக்கு தொடர்பாக கைது நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது அடுத்து குண்டர் சட்டமும் பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Shiva ,Azaraki ,CPCID , sivasankar baba
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு