×

திமுக ஆட்சியில்தான் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

செங்கல்பட்டு: சிறுபான்மையினர் நலன் சார்பில், இஸ்லாமிய பெண்களூக்கு  நலத்திட்ட உதவி மற்றும்  இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு, இஸ்லாமிய  மகளிருக்கு உதவும் சங்கங்களுக்கும், பொருளாதரத்தில் பின்தங்கிய மகளிர் குழுக்குளுக்கு 30 லட்சம், நிதியுதவியு,  இவங்கை அகதிகளுக்கு தலா 4 ஆயிரம் கொரோனா நிதி உதவி வழங்கினர்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், தமிழக முதல்வர் 100 நாளில் செய்து முடிப்பேன் என சொன்ன திட்டங்களை   30 நாளில் செய்து முடித்துள்ளார். லட்சக்கணக்காண மனுக்களுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது.  திமுக எப்போதும்  சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசு. நபிகள் நாயகம் பிறந்த தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது முதல் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, சிறிய மசூதிகளுக்கு  இலவச  மின்சாரம்  வழங்கியது என பல திட்டங்களை திமுக வழங்கியுள்ளது. கலைஞர் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காக  வாழ்ந்தவர். இஸ்லாமிய பெண்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்துவதற்கு 321 பெண்களுக்கு 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் புதிதாக தொழில் முனைவோர் அலுவலகம் வேதாச்சலம் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இளைஞர்கள், பெண்கள் சுயதொழில் தொடங்க வங்கியின் மூலம் கடன் பெற்று தரப்படும். இதில் ஆயிரக்கணக்கானோர் பயனடைவர்  என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், அரசு  சார்பில் இஸ்லாமிய பெண்களின்  வாழ்வாதாரம் மேம்பட மாவட்டந்தோறும்  எத்தனை குழுக்கள் அமைத்தாலும், அதற்கு நிதி வழங்க தமிழக  முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.   மாநிலம் முழுவதும் 106 அகதிகள் முகாம்களில் 38 ஆயிரம் குடும்பங்கள்  வசிக்கின்றன.  முகாமில் இல்லாமல் வெளியில் குடும்பங்களாக வசிக்கும் 13,556 குடும்பங்களுக்கும் கொரோனா நிதி அளிக்க 5.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு  சொத்தில் பங்கு, பெண் பிள்ளைகளுக்கு  கல்வி உதவித் தொகை, ஆட்சி அதிகாரம், விதவை  திருமண திட்டம், பஸ்களில் இலவச பயணம் திட்டம் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றார்.

Tags : Minister ,Ginger Masdan , DMK rule, Minister Ginger Mastan, speech
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...