×

ஆபாச படங்களை எடுத்து வெளியிட்டதாக புகாரில் ஷில்பா ஷெட்டி கணவர் கைது

மும்பை: நிர்வாண படங்களை எடுத்த புகார்களின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை மும்பை போலீசார் கைது செய்தனர். ஷில்பா ஷெட்டியின் கணவரான பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறை அவரை நேற்றுமுன்தினம் நள்ளிரவு கைது செய்தது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலே வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த பிப்ரவரியில் பெண்களின் படங்களை ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணைக்கு பின்னர், இவ்வழக்கின் முக்கிய சதிகாரராக செயல்பட்ட ராஜ் குந்த்ராவை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் அவருக்கு எதிரான போதுமான சான்றுகள் உள்ளன. மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆபாச படங்களை எடுப்பதற்காக நடிகர்களை கட்டாயப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட, இரு எப்.ஐ.ஆர் அடிப்படையில் கடந்த வாரம் ஒன்பது பேரை கைது செய்தோம். இவர்கள், வெளியிட்ட ஆபாச படங்கள் கட்டண மொபைல் செயலிகளில் வெளியிடப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில், ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடிகை பூனம் பாண்டே தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து சட்டவிரோத முறையில் தனது படங்களை பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அவர்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகத்தான் ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம்  23ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன் றம் அனுமதி வழங் கியுள்ளது. குந்த்ராவை தொடர்ந்து, இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியும், குந்த்ராவின் நிறுவன ஐடி பிரிவு தலைவரான ரையான் தோர்பே என்பவரும் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பெண்களை ₹10,000 கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். வெப் சீரிஸ்களில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றியுள்ளனர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Tags : Shilpa Shetty , Shilpa Shetty's husband, arrested
× RELATED பாடகருடன் மிருணாள் டேட்டிங்: ஷில்பா ஷெட்டி பார்ட்டியில் அம்பலம்