பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கும்  தனியார் தொழிற்சாலையின் சமுதாய மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய படுக்கைகள், உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார். இதனை பொன்னேரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அனுரத்னா பெற்று கொண்டார். மீஞ்சூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், தன்சிங், தமிழரசன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜலந்தர், சந்திரசேகர், ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் கார்த்திகேயன், சரவணன், தாரிக், குரு காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>