×

நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வாட்சப் வாயிலாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.



Tags : 10th, 12th class, for students, unit selection, school education
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...