×

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:   ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் செக் சாதிக் கான் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பு படை வீரர்களுக்கும், அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2  தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் இஸ்பாக் தார் என்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் என்பதும் தெரியவந்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் இஸ்பாக்குக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தீவிரவாதி மஜீத் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Kashmir , Kashmir, extremists, murder
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...