சென்னை மாநகராட்சியில் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல  மருத்துவர், பொது மருத்துவர் என 51 மருத்துவர்கள் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில்  11 மாத காலத்துக்கு பணியாற்ற தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்து, ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க  வேண்டும். மேலும் 27ம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிக்கான  நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>