×

கோவை ரயில் நிலையத்தில் ரூ. 1.25 கோடி போதைப்பொருள் கடத்தல்; நைஜீரிய வாலிபர் கைது

கோவை:டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொரோனா கால சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் கோவைக்கு வந்தது. இந்த ரயிலில் வரும் நைஜீரிய வாலிபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக  போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ரயில் நிலைய வளாகத்தில் முகாமிட்டனர். அவர்கள் குறிப்பிட்ட  ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளில் வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். நைஜீரியாவை சேர்ந்தவர்கள் எனக்கூறி மற்ற தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தனர்.  இதையடுத்து, அவர்களது பையை சோதனையிட்டனர். இதில், எட்வின் கிங்க்ஸ்லி (26) என்பவரின் பையில் தடை செய்யப்பட்ட மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Coimbatore Railway Station , Coimbatore, Railway Station, Narcotics Abduction, Nigerian youth arrested
× RELATED கோவை ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு’ விற்பனையகம்