சூறைக்காற்றுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமான சேவைகள் பாதித்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஏர்ஏசியா விமானம் 61 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு சென்னைக்கு வந்தது. அப்போது சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க முடியவில்லை. சிறிதுநேரம் வானில் வட்டமடித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை பெங்களூருக்கு திருப்பிஅனுப்பினர். பின்னர் அந்த விமானம், நேற்று அதிகாலை 1 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தது. அதைப்போல் சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு செல்ல வேண்டிய 2 பயணிகள் விமானங்கள், ஐதராபாத், பெங்களூரு, ஹாங்காங் செல்ல வேண்டிய 3 சரக்கு விமானங்கள் சுமார் ஒருமணி நேரம்  தாமதமாக புறப்பட்டுச்சென்றன.

Related Stories:

>