பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: தமிழக பாஜ தலைவர் பேட்டி

சென்னை: ‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது தான் பாஜவின் நிலை. அதற்காக பல்வேறு நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. அது குறித்து நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவிப்பார். அதிமுக பாஜ கூட்டணி சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எங்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். நாங்களும் மரியாதை வைத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>