அமைச்சர் ஆவடி நாசர் தகவல் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆவினுக்கு ஆட்கள் தேர்வு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதற்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>