விளைச்சல், வரத்து எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் விலை சரிவு

சென்னை: விளைச்சல் அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பழங்கள் விலை வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட சாத்துக்குடி தற்போது ரூ.20 முதல் ரூ.40 வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. அதே போல கொய்யா ஒவ்வொரு தரத்திற்கு ஏற்றாற் போல் ரூ.20 முதல் 60 வரை விற்பனையாகிறது. இதே போல ஆப்பிள்(நம்பர் 1) 18 கிலோ கொண்ட பெட்டி ரூ.4000 வரை விற்கப்படுகிறது. இதே போல தரத்திற்கு ஏற்றாற்போல் ஆப்பிள் ரூ.3200, 1800 என்று விற்பனையாகிறது. அண்ணாச்சி பழம் ரூ.25, சப்போட்டா ரூ.20 முதல் 40 வரையும், திராட்சை(கருப்பு) நான்கரை கிலோ பெட்டி ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்பனையாகிறது. இன்னும் வரும் நாட்களில் பழங்கள் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறையும் என்றார்.

Related Stories:

>