தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம்: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை: தமிழின் மகத்தான படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்ப்பது, தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது, 1956ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழை முழுமையான ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவது, தமிழ் கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு  இவை போன்ற பெரும் முயற்சிகளை தனி கவனம் செலுத்தி மேற்கொள்ள தமிழ் மொழி வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். தவிர, நம் மொழியின் மீதும், பண்பாட்டின் மீதும் தாக்குதல்களும், திணிப்புகளும் நிகழ்கிற காலக்கட்டத்தில் தனி அமைச்சகம் என்பது இன்னமும் பொருத்தப்பாடு மிக்கதாகிறது.

Related Stories:

>