மரம் விழுந்து ஒருவர் பலி

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி மெயின்ரோட்டில் உள்ள வலுவிழந்த பழமையான மரம் ஒன்று நேற்று காலை திடீரென முறிந்து மொபட்டில் சென்றவர்கள் மீது விழுந்தது. இதில் மொபட்டை ஓட்டிவந்தமேற்கு மாம்பலத்தை சேர்ந்த பத்ரி நாராயணன்(47) அதே இடத்தில் பலியானார். உடன் வந்த ராமானுஜம்(60) காயத்துடன் உயிர் தப்பினார். புகாரின்பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>