×

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 336 வாகனங்கள் பறிமுதல்: 247 வழக்குகள் பதிவு

சென்னை: ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 247 வழக்குகள் பதிவு செய்து 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாத 815 பேர் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 6 பேர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகன சோதனையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 318 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 815 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Seizure of 336 vehicles violating curfew rules: 247 cases registered
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...