×

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பு: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை 11 மணிக்கு கூடியவுடன் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 நோட்டீஸ்களை அளித்திருந்தனர். விவாதம் நடத்த வேண்டும் என கோரி மைய பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். ஆனால் பூஜ்ய நேரத்தில் விவாதங்களை எழுப்பலாம் என அவை தலைவர் கூறினார்.

எனினும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு நீதி வேண்டும் எனக்கூறி திமுக எம்.பிக்களும் முழக்கமிட்டனர். இதன்பின் 2 மணிக்கு மாநிலங்களவை தொடங்கிய பின் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் வியாழக்கிழமை நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Tags : Opposition , Lok sabha
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...