திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வௌியிடப்பட்டது. காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் இதனை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>