×

அதிமுக கொடி கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையும் கிடையாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை : சசிகலாவின்  காரில் அதிமுக கொடி கட்டி செல்வதை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை வந்த சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டியிருந்தார். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவரை சந்திப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் காரில் எப்படி அவர் அதிமுக கொடி கட்டி செல்லலாம்? அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தமில்லாமல் எப்படி அண்ணா திமுக கொடியை கட்டிக் கொண்டு செல்ல முடியும்.அதிமுக கொடி கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையும் கிடையாது.

எம்ஜிஆர் மனைவி ஜானகி விட்டு கொடுத்தது போல, சசிகலாவுக்கு பெருந்தன்மையோடு வவிட்டுக் கொடுக்க வேண்டும். அதிமுக ஜானகி – ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரிய கூடாது, கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி விலகிக் கொண்டார். அதே போல அதிமுக இணைப்பிற்காக சசிகலா தடையாக இருக்கக் கூடாது,என்றார்.

Tags : Sasikala ,AIADMK ,Former Minister ,Jayakumar Kattam , ஜெயக்குமார்
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா