பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்?

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து, கோமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த சிலர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவ்வழக்கு நேற்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான 6 பேரை மகளிர் போலீசார் இன்று பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>