பிளஸ் 2 தேர்வு முடிவு குமரியில் 23,236 பேர் தேர்ச்சி

நாகர்கோவில் : தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குமரி மாவட்டத்தில் 23236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் 2020-2021ம் கல்வியாண்டில் 255 அரசு, அரசு உதவிபெறும் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 12050 மாணவியரும், 11186 மாணவிகளும் ஆக மொத்தம் 23236 பேர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்டத்தில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 74 மாணவ மாணவியரும், 550 முதல் 579 வரையிலான மதிப்பெண்களில் 1287 பேரும் பெற்றுள்ளனர்.

Related Stories:

>