×

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே ஒரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

வருகிற 22-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி ,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். வருகின்ற 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வேண்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இன்று முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடாப் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, தெற்கு வங்ககடல், மத்திய வங்கக் கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு பகுதிகள், அரபிகடல் , தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Meteorological Center , Chance of rain in 5 districts in the next 24 hours due to southwest monsoon: Meteorological Center information
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...