×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் களைகட்டும் குர்பானி ஆடுகளின் விற்பனை..!!

சென்னை: தியாக திருநாள் என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை பல்லாவரத்தில் குர்பானி கிடா ஆடுகளின் விற்பனை களைக்கட்டியிருக்கிறது. எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் குர்பானி கிடா ஆடுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லவரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமியர் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட குர்பானி ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குர்பானி ஆட்டு கிடாக்களை வாங்கி செல்லும் இஸ்லாமியர்கள் பக்ரீத் அன்று குர்பானி கொடுத்து ஒரு பங்கு தங்களுக்கும், மற்றொரு பங்கு உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கு ஏழை எளியோருக்கும் வழங்கி ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்வதாக தெரிவித்தனர். 25 கிலோ முதல் 45 கிலோ வரை உள்ள குர்பானி ஆடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. கிலோ ஒன்றிற்கு 360 ரூபாய் முதல் 420 ரூபாய் வரை விலை நிர்ணயித்து வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Tags : Chennai ,Bakreed festival , Bakreet, Chennai, Qurbani Goats
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...