அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி விசாரணை : ஒன்றிய அரசின் விளக்கத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி!!

மும்பை : பிரபல தொழில் அதிபரான கெளதம் அதானி நிறுவனங்களின் செபி மற்றும் வருவாய் புலனாய்வு ஆய்வு இயக்குனரகம் திடீர் ஆய்வு நடத்திவதில் விளைவாக அவரது நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளனர்.கெளதம் அதானியின் 6க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்கு ஒழுங்குமுறை விதிகள் மீறல்கள் என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரது நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன், அதானி துறைமுகம் மற்றும் அதானி எரிசக்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் என்று அழைக்கப்படும் செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மேற்கொண்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று ஒன்றிய நீதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் கவுத்ரி தெரிவித்தார். அதானியின் வெளிநாட்டு முதலீடுகள் உள்ள இந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஒன்றிய அரசின் இந்த தகவலால் மும்பை பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் 5% வீழ்ச்சி அடைந்துள்ளன.

நேற்று மும்பை பங்குச் சந்தை 587 புள்ளிகள் நஷ்டத்துடன் நிறைவடைந்தது. இதனால் அதானி உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 1.20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

More
>