×

மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை: இங்கிலாந்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனியன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நேற்று முதல் தளர்த்தப்பட்டன.

கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முடிவுக்குவருவதாகவும், மக்களுக்கு சுதந்திரமான நாள் என்றும்  பிரதமர் போரிஸ் நேற்று அறிவித்துள்ளார்.  இதனால், இனி பொதுமக்கள் முககவசம் அணியதேவையில்லை. சமூக இடைவெளியை பின்பற்றும் அவசியமில்லை.  இங்கிலாந்தில் பெரியவர்களில் 88 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.


Tags : UK , Mask, social gap is not necessary: removal of all restrictions in the UK
× RELATED 4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன...