எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் சாலையோர உணவு கடைகளுக்கு சான்று: பரந்தாமன் எம்எல்ஏ வழங்கினார்

சென்னை: எழும்பூர் தொகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, புரசைவாக்கத்தில் நேற்று நடந்தது. சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் அறிவியல் ஆலோசகர் பசுபதி,  பயிற்சி வகுப்பை நடத்தினார். தொடர்ந்து, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் சாலையோர கடைகளின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  

நிகழ்ச்சியில் பரந்தாமன் எம்எல்ஏ பேசுகையில், ‘சாலையோர  கடைகளில் தரமான உணவுகளை சுகாதார முறையில் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் வழங்க தமிழ்நாட்டில் முதன்முறையாக எனது தொகுதியில் ஏற்பாடு செய்துள்ளேன். இது ஒரு முன்முயற்சியாகும். விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன். உணவு பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றால் அதன் மூலமாக வங்கியில் கடனுதவி பெறலாம்,’ என்றார்.

Related Stories:

>