அழகூர் - படப்பை வரை சாலை வசதி: கலெக்டரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்பெரும்புதூர் அருகே அழகூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், சாலை வசதி கேட்டு கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில்  கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே அழகூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் இருந்து அனைத்து தேவைகளுக்கும் படப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது.

அழகூருக்கும் படப்பைக்கும் இடையே சாலை வசதி இல்லாமல் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் ஒரு கிலோ மீட்டர்  தூரம் உள்ளதால், இங்கு சாலை அமைக்க முடியவில்லை. இதையொட்டி 4 கிமீ தூரம் அவசர தேவைகளுக்குக் கூட சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே அழகூரில் இருந்து படப்பைக்கு செல்லும் சாலையை வனத்துறை அனுமதியுடன் சீரமைத்து தர வேண்டும் என கூறப்பபட்டுள்ளது.

Related Stories:

>