×

நாளை பக்ரீத் பெருநாள் பள்ளிவாசல்களில் விதிகளை பின்பற்றி தொழுகை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் வேண்டுகோள்

சென்னை: பக்ரீத் பெருநாளையொட்டி பள்ளிவாசல்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்துவோம் என்று இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பக்ரீத் பெருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு தந்து, பள்ளிவாசல்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்துவோம். துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது 5164 பயணிகள் ஹஜ்க்கு சென்றனர். அப்போது அவர்களை சென்னை விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தவர் மு.க.ஸ்டாலின். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் ஒரு துணை முதல்வர் ஹஜ் பயணிகளை வழியனுப்ப விமான நிலையம் வந்தது அதுவே முதல் முறை. வரும் ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஹஜ் பயணிகளை தமிழகத்திலிருந்து அனுப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய அனுமதியை பெற்று தருவார் என்ற நம்பிக்கை நிரம்ப இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bakreed ,Eid ,President of ,Indian Hajj Association , Prayer following the rules in the mosques of Bakreed Eid tomorrow: Indian Hajj Association President's request
× RELATED உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்காக தயாராகும் மக்கள்..!!