×

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான புகார் எண்களில் தகவல் தரலாம்

சென்னை: சென்னை தொலைத்தொடர்பு வட்ட சிஜிஎம் சஞ்சீவி நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா காலம் என்பதால் செல்போன், லேன்ட்லைன், பிராட்பேண்ட், எப்.டி.டி.எச் வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் புகார்கள் குறித்து 7 நாட்களில் பதில் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, மத்திய பகுதிக்கு உட்பட்ட சென்ட்ரல், அடையார் பகுதி மக்கள் 044-28552216, 9445084760 ஆகிய எண்களிலும், வடக்கு பகுதிக்கு உட்பட்ட கல்மண்டபம், மாதவரம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதி மக்கள் 044-25395858, 9445083639 ஆகிய எண்களிலும், மேற்கு பகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், கே.கே.நகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி மக்கள் 044-23728877, 9445084745 ஆகிய எண்களிலும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, செங்கல்பட்டு பகுதி மக்கள் 044-22501122, 9445084018 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவலுக்கு www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தை காணலாம்.

Tags : BSNL , BSNL customers can report information on complaint numbers
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...