கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் மாற்றம் : பாஜக தலைவர் நலீன் குமார் பேசிய ஆடியோ வெளியீடு!!

பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் மாற்றப்பட உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் நலீன் குமார் காடில் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜகவினர் சிலரே போர்க்கொடி தூக்கி உள்ளதால் விரைவில் முதல்வர் மாற்றப்படலாம் என கூறப்பட்டது. இதனால் டெல்லிக்கு விரைந்த எடியூரப்பா, இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கர்நாடகம் மாநில முதல்வர் விரைவில் மாற்றப்படுவார் எனவும் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் அம்மாநில பாஜக தலைவர் நலீன்குமார் காடில் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ளது.முதல்வர் பதவிக்கு 3 பெயரின் பெயர்களை தலைமை பரிசீலித்து வருவதாகவும் அந்த ஆடியோவில்  கூறப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதே சமயம் அந்த ஆடியோவில் இருப்பது தமது குரல் அல்ல என்று மறுத்துள்ள நலீன் குமார் காடில் முதல்வர் மாற்றம் குறித்து எந்தவித பேச்சும் எழவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும், எடியூரப்பா, கர்நாடகா பாஜகவின் ஆன்மா. கர்நாடகாவில் பாஜகவை வளப்படுத்தி ஆட்சிக்கு கொண்டு வந்தது எடியூரப்பா தான்.ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா ஆகிய இருவருமே கர்நாடக பாஜகவின் இரு கண்கள் போல.அனைவரின் ஆசியோடுதான் பாஜக அரசு திறம்படி செயல்பட்டு வருகிறது. தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை,என்றார்.மேலும் தாம் பேசியதாக உலா வரும் ஆடியோ விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பாவிடம் வலியுறுத்த உள்ளதாகவும் நலீன் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: