×

தடையை மீறி கன்வர் யாத்திரை செல்வோரை போலீஸ் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் தடுக்க வேண்டும் : உ.பி.அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி:  கன்வர் யாத்திரையை ரத்து செய்த உத்தரப்பிரதேச அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கன்வர் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்தினம் ரத்து செய்தது. ஆனால் உத்தரப்பிரதேச அரசு கொரொனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் 25ம் தேதி முதல் யாத்திரையைத் தொடங்கலாம் என்று அனுமதி வழங்கியது. இதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், எதன் அடிப்படையில் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் இத்தைகைய செயல்பாடு என்பது சரியானது என கேட்டு இதுகுறித்து உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி கடந்த 14ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் உத்தரவில், கன்வர் யாத்திர விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசு தற்போதைய முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் மத நம்பிக்கையை காரணம் காட்டி சமரசம் செய்து கொள்ள முடியாது. இதில் உத்தரப்பிரதேச அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், அதனை உச்ச நீதிமன்றமே மேற்கொள்ளும். அது தடையாக கூட இருக்கும். என தெரிவித்த நீதிபதிகள், இதற்கு இரண்டு நாள் அவகாசம் வழங்குவதாகவும், இந்த வழக்கில் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்..

இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சிங்கால் வெளியிட்ட அறிவிப்பில் “ உத்தரப்பிரதேச அரசு கன்வர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த ஆண்டு கன்வர் பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, கன்வர் யாத்திரையை ரத்து செய்த உத்தரப்பிரதேச அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.  உத்தரப்பிரதேச அரசின் முடிவை அடுத்து தானாக முன்வந்து பதிவுசெய்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. அத்துடன் தடையைமீறி யாத்திரை செல்வோரை போலீஸ் உள்ளிட்ட அனைத்துமட்டத்திலான அதிகாரிகளும் தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


Tags : Kanwar ,UP government , கன்வர் யாத்திரை
× RELATED அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க...