×

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி!: டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!!

வாஷிங்டன்: கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். நடால், ஃபெடரர், செரினா வில்லியம்ஸ், சிமோனா ஹாலேக் போன்ற டென்னிஸ் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 17 வயது வீராங்கனை கோகோ காஃப் ஒலிம்பிக்கில் இருந்து  விலகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக் பங்கேற்க வேண்டும் என்பது தன் கனவு என்றும் இந்த முறை அந்த கனவு நிறைவேறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது நிறைவேறும் என்றும் ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்து வரும் கோகோ காஃப், இந்த ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவிலும் பங்கேற்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Tokyo ,Olympics , American tennis player, Corona, Tokyo Olympics
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்