பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கொட்டும் மழையில் சைக்கிளில் பேரணி

டெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு கொட்டும் மழையில் சைக்கிளில் வந்து முழக்கமிட்டனர்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தனர். கொட்டும் மழையிலும் சைக்கிளில் ஊர்வமாக வந்த அவர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கமீட்டனர்.

இதனிடையே மாநிலங்களவையில், மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.இதே போல பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ ஆகியவை நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும் கன்னியகுமாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த் உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்பிக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories:

>