×

முடிவுக்கு வருமா பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம்?: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் முடிவு..!!

ரியாத்: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒபெக் இணங்கியுள்ளது. உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப தினசரி 4 லட்சம் பீப்பாய்  கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 58 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைக்க மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைவிடுவதாக ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒபெக் அமைப்பின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிததாக பொறுப்பேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : OPEC , Petrol, Diesel, Inflation, Crude Oil, OPEC
× RELATED முடிவுக்கு வருமா பெட்ரோல், டீசல் தொடர்...