×

தென் மேற்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக அடிக்கடி வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மாலை நேரம் மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக நேற்று செய்யார், சூளகிரியில் 100 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், தென் மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி, சேலம், மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். இது தவிர, வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் 21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளது.

Tags : South West ,TN , Southwest monsoon, Tamil Nadu, rains
× RELATED சராசரியை காட்டிலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்