×

நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை தொழுகையை திடலில் நடத்த அனுமதிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜூலை 21ம் தேதி இஸ்லாமியர்களின் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்கு அல்லது திடல்களில் சென்று ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற தமிழக அரசு அனுமதி அளிக்குமா என தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

பக்ரீத் பண்டிக்கைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை மசூதிகள் மற்றும் திடல்களில் தனிமனித இடைவெளியுடன் நடத்தி கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து அனுமதி தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் பள்ளிவாசல் மற்றும் திடல்களில் தொழுகைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தொழுகைக்கு தேவையான தொழுகை விரிப்புகளை தனிதனியே கொண்டு வருவது, முதியவர்கள், குழந்தைகள் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்வது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு சிறப்பு தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.



Tags : Bakreed ,Chief Minister ,MK Stalin , Bakreed Festival, Prayer, Chief, MK Stalin, Request
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...