×

பள்ளிப்பட்டு அருகே விதிமீறி செயல்படும் கல் குவாரி: கலெக்டரிடம் மனு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரியை மூடக்கோரி, கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிப்பட்டு அருகே  கொளத்தூர் கிராமத்திற்கு அருகில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கல் குவாரிக்கு கடந்த அதிமுக ஆட்சியின்போது, தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாய நிலங்கள், வீடுகள் நிறைந்த பகுதி அருகில் உள்ள மலையில் தினந்தோறும்  அரசு விதிகளை மீறி அதிக சத்தத்துடன் கூடிய வெடி மருந்து பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் கிராமத்தில் குழந்தைகள், முதியோர், பெண்கள் அச்சமடைகின்றனர்.

மேலும், அடிக்கடி வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் விவசாய நிலங்களில் கற்கல் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதி மீறி கல் குவாரியிலிருந்து கட்டுக்கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் எடுப்பதால் காற்றில் தூசி பறப்பதால், தண்ணீர் மாசடைந்து  கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. கிராம மக்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு, சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் கல்குவாரி உரிமையை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pallipattu , Pallipattu, Violation, Stone Quarry, Collector,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு