×

ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட சொத்துகளை தாக்கி அழியுங்கள்: தலிபான் தீவிரவாதிகளுக்கு பாக். உத்தரவு 10,000 வீரர்களை உதவிக்கு அனுப்பியது

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் அரசு படைகளை தாக்கி வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிட, தனது நாட்டை சேர்ந்த 10 ஆயிரம் பேரை பாகிஸ்தான் அனுப்பி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள்  திருப்பப் பெறப்பட்டு வருவதால், தலிபான் கை மீண்டும் ஓங்கியுள்ளது. இது, அரசுப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி, நாட்டின் பெரும் பகுதியை பிடித்து விட்டது. இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசுப் படைகளுடன் போரிட்டு வரும் தலிபான்களுடன் இணைந்து போரிடுவதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த 10 ஆயிரம் பேரை இந்நாட்டு உளவுத்துறையான ஐஎஸ்ஐ அனுப்பி வைத்து இருப்பதாக, இந்திய உளவுத்துறைகள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளன.

இவர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களா அல்லது தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களா என்பது  உறுதிப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பல ஆயிரம் கோடி நிதியுதவி மூலமாக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடத்தை இந்தியாதான் கட்டிக் கொடுத்துள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் பள்ளிக் கூட கட்டிடங்கள், மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவால் அமைக்கப்பட் ட கட்டிடங்கள், சொத்துகளை தாக்கி, இந்தியாவின் பங்களிப்பு தெரியாத வகையில் அழிக்கும்படி தலிபான்களுக்கு ஆதரவாக போரிட அனுப்பப்பட்டுள்ள தனது நாட்டின் வீரர்களுக்கும், தலிபான்களுக்கும் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ உத்தரவிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறைகள் அதிர்ச்சி  தகவலை கூறியுள்ளன.


Tags : India ,Afghanistan ,Taliban , Afghan, India, property, Taliban militant, pak. Order
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...