ஐரோப்பிய நாடுகளில் தொடரும் பேய்மழை: ஜெர்மனியில் 143 பேர் பலி

பெர்லின்: ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்த பேய் மழைக்கு மேற்கு ஐரோப்பாவில் இதுவரை 180 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். குறிப்பாக, ஜெர்மனி மழை வெள்ளத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஜெர்மனியின் ஆர்வீலர் பகுதியில் அதிகபட்சமாக 110 பேரும், ரைன் வெஸ்ட்பலியா மாகாணத்தில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியத்தில் 27 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஜெர்மனியின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

Related Stories: