செல்பி எடுத்தால் ரூ.100 தரணும்...பாஜ பெண் அமைச்சர் அதிரடி

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதில், கலாசாரத் துறை அமைச்சராக இருப்பவர் உஷா தாக்கூர். இவர் நேற்று அளித்த பேட்டியில், ‘கட்சி விழாக்களின் போது என்னுடன் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பும் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த பகுதி பாஜ.வின் வளர்ச்சிக்காக ரூ.100ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ஏனெனில், செல்பி எடுப்பதால் முக்கிய பணிகளுக்கு நான் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது,’  என்று அதிரடியாக கூறியுள்ளார்.  மேலும், தனக்கு மலர் மாலைகள், பூங்கொத்துகள் அளிப்பதற்கு பதிலாக புத்தகங்கள் தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், ‘பரிசுத்தமான சுவாமி கிருஷ்ணருக்கு  மட்டுமே பூக்களை காணிக்கையாக தர வேண்டும்.  ஏனெனில், அவற்றில் கடவுளான லஷ்மி  குடி கொண்டுள்ளார்,’ என்பதுதான்.

Related Stories:

More
>