×

மகள் கடத்தல் விவகாரத்தில் மோதல் பாகிஸ்தானுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆப்கான்: அதிபர் அஷ்ரப் கனி உத்தரவு

காபூல்: பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அலிகில் செயல்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்கள் திடீரென இவருடைய மகளை கடத்திச் சென்றனர். அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், பின்னர் பூங்கா ஒன்றின் அருகில் விட்டு விட்டு சென்றது. காயங்களுடன் இருந்த அவரை போலீசார் மீட்டனர். அவரை கடத்தியவர்களை 46 மணி நேரத்தில் கைது செய்யும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தூதர் நஜிமுல்லா உட்பட மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும்  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி திரும்ப அழைத்துள்ளார். அவர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்பும்படி நேற்றிரவு உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் செயல்படும் தகவல் வெளியான நிலையில்., இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.

Tags : Afghanistan ,President ,Ashraf Gani , Daughter abduction, ambassador to Pakistan, Afghan, President Ashraf Ghani
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி