×

4ம் கட்ட ஆய்வு முடிவு வெளியீடு சென்னையில் மாஸ்க் அணியும் பழக்கம் அதிகரிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பொதுசுகாதார வல்லுநர் தனது டிவிட்டர் பக்கத்தில்: சென்னை, மாநகராட்சி நிறுவனத்தின் தேசிய நோய் தொற்று அறிவியல் மையம் ஆகியவை இணைந்து சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் மக்கள் மத்தியில் எப்படி உள்ளது 3 கட்ட ஆய்வுகளை முடித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற முதற்கட்ட ஆய்வில் குடிசைப்பகுதிகளில் 28 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 36 சதவீதம் பேரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற 2ம் கட்ட ஆய்வில் குடிசைப்பகுதிகளில் 29 சதவீமாகவும், மற்ற பகுதிகளில் 35 சதவீதமாகவும் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்திய 3ம் கட்ட ஆய்வில் குடிசைப்பகுதியில் 21 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 27 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட 4ம் கட்ட ஆய்வில் குடிசைப்பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வோர் எண்ணிக்கை 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர். இந்த 4- கட்ட ஆய்வுகளும் தேர்வு செய்யப்பட்ட 64 தெருக்களில் வெளிப்புறங்களில் இருந்து 3,200 பேரிடம், வீட்டுக்குள் இருப்பவர்கள் 1,280 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதுள்ளதாக பதிவில் கூறியுள்ளார்.

Tags : Phase 4 study results released Increase in mask wearing habits in Chennai: Information in ICMR study
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100