வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வரும் வகையில் 11 மருத்துவக்கல்லூரி, கலெக்டர் அலுவலக கட்டுமான பணி எப்போது முடியும்? முதல்வர் உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து 11 மருத்துவக்கல்லூரி, 5 கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் முடிக்கப்படுவது எப்போது? என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளிப்படையாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் நடக்கும் முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் தரமான பணிகளை விரைவாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகளை எப்போது முடிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதே போன்று ரூ.82 கோடியில் தேனி கால்நடை கல்லூரி, ரூ.82 கோடியில் உடுமலைப்பேட்டை கல்லூரி கட்டிடம், கீழ்ப்பாக்கம், கோவை,  மதுரை மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம், திருச்சி, கோவை தகவல் தொழில்நுட்ப கட்டிடம், ராமநாதபுரம், தேனி, சேலம் அரசு சட்டக்கல்லூரி  கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்பதை  வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் நடந்து வரும் பணிகள் முடிப்பது எப்போது என்று அறிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

* 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்

மாவட்டம்    மதிப்பு    பணி முடியும் தேதி

விருதுநகர்    ரூ.380 கோடி    15.10.2021

நாமக்கல்                        ரூ.338.76 கோடி    30.09.2021

திருப்பூர்                        ரூ.336 கோடி    14.12.2021

நாகை                        ரூ.366.85 கோடி    02.12.2021

கிருஷ்ணகிரி    ரூ.338 கோடி    15.10.2021

திண்டுக்கல்    ரூ.327 கோடி    08.12.2021

ராமநாதபுரம்    ரூ.345 கோடி    31.12.2021

திருவள்ளூர்    ரூ.385 கோடி    31.06.2022

கள்ளக்குறிச்சி    ரூ.381 கோடி    31.07.2022

அரியலூர்    ரூ.347 கோடி    31.01.2022

ஊட்டி                        ரூ.447 கோடி    20.09.2022

* 5 மாவட்ட கலெக்டர் அலுவலக பணிகள்

மாவட்டம்    மதிப்பு    பணி முடியும் தேதி

செங்கல்பட்டு    ரூ.119 கோடி    16.04.2022

திருப்பத்தூர்    ரூ.109 கோடி    17.07.2022

கள்ளக்குறிச்சி    ரூ.104 கோடி    21.10.2022

ராணிப்பேட்டை    ரூ.118 கோடி    27.04.2022

தென்காசி    ரூ.119 கோடி    27.08.2022

Related Stories:

>