×

கேன்ஸ் திரைப்பட விழா பாம் டி’ஓர் விருது வென்ற ‘டைடேன்’

பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘டைடேன்’ என்ற பிரான்ஸ் படத்துக்கு பாம் டி’ஓர் என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த 2019ல் நடந்த விழாவில், தென்கொரியாவின் ‘பாராசைட்’ என்ற படம் பாம் டி’ஓர் விருது வென்றது. கடந்த 2020ல் கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 74வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது.

தினமும் சர்வதேச படங்கள் திரையிடப்பட்ட நிலையில், இறுதிநாளில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மிக உயரிய பாம் டி’ஓர் விருதை பிரான்ஸ் படமான ‘டைடேன்’ தட்டிச்சென்றது. இப்படத்தின் இயக்குனர் ஜூலியா டூகோர்னா விருதை பெற்றுக்கொண்டார். பாம் டி’ஓர் விருது பெறும் 2வது பெண் என்ற பெருமை ஜூலியா டூகோர்னாவுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது, அமெரிக்காவை சேர்ந்த காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ், சிறந்த நடிகைக்கான விருது நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே, சிறந்த இயக்குனருக்கான விருது லியோஸ் காரக்ஸ் பெற்றனர். சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘டிரைவ் மை கார்’ என்ற படத்துக்காக ஜப்பானை சேர்ந்த ஹாமாகுச்சி பெற்றார்.

Tags : Cannes Film Festival , Titan won the Palme d'Or at the Cannes Film Festival
× RELATED இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு...