திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் சுப்பாரெட்டி நியமனம்: ஆந்திர மாநில அரசு முடிவு

திருமலை:   திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் 2வது முறையாக சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், அமராவதியில் மாநில உள்துறை அமைச்சர் சுச்சரித்தா, ஆந்திரா மாநில அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது, ஆந்திராவில் உள்ள அரசின் பல்வேறு துறைகளுக்கு புதிய தலைவர்கள், இயக்குநர்கள் நியமிக்கப்பட்டதற்கான பட்டியலை சஜ்ஜல ராமகிருஷ்ணா வெளியிட்டார். இதில், மொத்தம் 135 பதவிகளில் பெண்களுக்கு 68 பதவிகளும், ஆண்களுக்கு 67 பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பாவும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான சுப்பா ரெட்டியை மீண்டும் 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார் என சஜ்ஜலா தெரிவித்தார்.

Related Stories:

>