×

இந்திய நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்கு தேக்கம் என கூறுவது இரக்கமற்றது: தலைமை நீதிபதி ரமணா காட்டம்

புதுடெல்லி: ‘இந்திய - சிங்கப்பூர் சமரச மாநாடு’ டெல்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: எந்தவொரு சமூகத்திலும் மோதல் என்பது தவிர்க்க முடியாதது.  இதற்கு, சமரச தீர்வு காண்பதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மோதலின் ஆரம்பக் கட்டத்திலேயே சமரச தீர்வு காணப்பட வேண்டும்.  இந்திய நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குககள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகின்றன.

இது, இந்திய நீதிமன்றங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் திறன் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த புள்ளி விபரம் மிகவும் மிகைப்படுத்தப்பட்டது. அதோடு, இரக்கமற்ற பகுப்பாய்வும் கூட.  வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில், வசதிப் படைத்தவர்களின் வழக்குகளும் ஒன்றாகும்.இவ்வாறு அவர் பேசினார்.  

மகாபாரதம் சிறந்த உதாரணம்
தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேலும் பேசுகையில், ‘‘மோதலின் ஆரம்பத்திலேயே சமரசம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு மகாபாரதத்தை சிறந்த உதாரணமாக கூறலாம். பாண்டவர்கள் - கவுரவர்கள் இடையிலான மோதலை தீர்க்க, கிருஷ்ணர் சமரச முயற்சியை மேற்கொண்டார். இதுேபான்ற சமரசங்கள் தோல்வியில் முடியும் போது, அது மிகப்பெரிய அழிவில் முடிகிறது,’’ என்றார்.

Tags : Chief Justice ,Ramana Kattam , Indian court, case stagnant, ruthless, Chief Justice Ramana
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...