ஒரு வாரத்துக்கு தீவிர தூய்மை பணி சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற நாளை முதல் 24ம் தேதி வரை ஒரு வாரகாலத்திற்கு தீவிர தூய்மை பணி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  320 இடங்களில் சுமார் 1,300 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 2,500 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5,688 இடங்களில் 52,043 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. பொது இடங்களை தூய்மைப்படுத்தி மாநகரின் அழகை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில், சிறப்பு நடவடிக்கையாக 24ம் தேதியன்று தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்களை கொண்டு சுவரொட்டிகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறவுள்ளது.

Related Stories:

>