துணை கமிஷனர் ஜெயலட்சுமி ஆவின் விஜிலென்சுக்கு மாற்றம்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை கமிஷனராக இருந்தவர் ஜெயலட்சுமி. சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையங்களும் இவரது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எந்த புகார்கள் வந்தாலும் இவருக்கு கீழ் உள்ள மகளிர் காவல்நிலைய அதிகாரிகள்தான் விசாரித்து வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை இவர் நேரில் விசாரித்து வந்தார். இந்தநிலையில், ஜெயலட்சுமி அதிரடியாக, ஆவின் விஜிலன்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More
>