×

திருவாரூர் அருகே பாசப் போராட்டம் பழகிய ஆடுகளை பிரிய மனமில்லாமல் நீண்ட தூரம் லாரியை துரத்திய நாய்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருவாரூர்: திருவாரூர் அருகே பழகிய ஆடுகளை பிரிய மனமில்லாமல் லாரியை விரட்டிக்கொண்டு நீண்டதூரம் நாய் ஒன்று சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்டா மாவட்டமான நாகை, திருவாரூர், தஞ்சை விவசாய நிலங்களில் இயற்கை உரத்திற்காக ராமநாதபுரத்தில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டு இந்த பகுதிகளில் ஆங்காங்கு பட்டிகள் போடப்பட்டு இரவு நேரங்களில் வயல்களில் அடைத்து மறுநாள் காலை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். சாகுபடி பணிகள் துவங்கிய பின்னர், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு அதன் உரிமையாளர்கள் ஆடுகளை ஓட்டி சென்று விடுவார்கள். இதில் பெரும்பாலானவர்கள் நடைபாதையாகவே தங்களது ஆடுகளை ஓட்டிச் செல்லும் நிலையில், ஒரு சிலர் மட்டும் லாரியில் ஏற்றி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

 இதுபோன்று ஆடுகளை வளர்த்து வருபவர்கள் ஆடுகளின் பாதுகாப்பிற்காக நாய்களையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம்பணங்குடி, ஆண்டிபந்தல் ஆகிய பகுதிகளில் பட்டிகள் போட்டு ஆடுகளை வளர்க்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் தவித்தனர். இதனால் சொந்த ஊருக்கு ஆடுகளை மீண்டும் கொண்டு செல்லாமல் அந்தபகுதிகளில் உள்ள தரகர்களிடம் ஆடுகளை விற்றதாக தெரிகிறது. இந்த ஆடுகளை வியாபாரிகள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.

ஆடுகளுடன் ஒன்றோடு ஒன்றாக வளர்ந்ததால் மனமுடைந்த நாய், பிரியமுடியாமல் லாரி போகும் வழியெல்லாம் கத்திகொண்டு துரத்தி சென்றது. அப்போது லாரியை துரத்தி சென்ற நாயை பின்தொடர்ந்த வாகன ஓட்டிகள், ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Thiruvarur , Thiruvarur, Affection, Lorry, Dog, Social Website,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...